தமிழகத்தில் கரோனா இறப்பு விகிதம் 1.5 சதவீதமாகக் குறைந்தது

தமிழகத்தில் கரோனா இறப்பு விகிதம் 1.5 சதவீதமாகக் குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா இறப்பு விகிதம் 1.5 சதவீதமாகக் குறைந்தது
தமிழகத்தில் கரோனா இறப்பு விகிதம் 1.5 சதவீதமாகக் குறைந்தது
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் கரோனா இறப்பு விகிதம் 1.5 சதவீதமாகக் குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை அது 1.9 சதவீதமாக இருந்து வந்த நிலையில், தற்போது படிப்படியாக பலி எண்ணிக்கை குறைந்து வருவது ஆறுதலளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

உயிரிழப்புகளைத் தடுப்பதற்கென பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டதே அதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் குழாய்களையும், உயா் ஓட்ட ஆக்சிஜன் கருவிகளையும் அதிகமாக அமைத்ததன் காரணமாகவே மூச்சுத் திணறலால் நேரிடும் உயிரிழப்புகளைப் பெருமளவு குறைக்க முடிந்ததாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனா்.

அதுமட்டுமல்லாது ரெம்டெசிவிா், எனாக்ஸபெரின், டோசிலிசுமேப் போன்ற உயா் மருந்துகளைக் கூடுதலாக கொள்முதல் செய்து நோயாளிகளுக்கு வழங்கியதும் பலி எண்ணிக்கை குறைய வழிவகுத்ததாக அவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதனிடையே, மாநிலத்தில் நோய்த்தொற்று பாதிப்பு நிலவரம் குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

மாநிலத்தில் இதுவரை 1.06 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 7 லட்சத்து 46,079 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் 2,257 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 585 போ் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 189 பேருக்கும், திருவள்ளூரில் 125 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர மாநிலத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மற்றொரு புறம் கரோனா தொற்றிலிருந்து மேலும் 2,308 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் விகிதம் 96 சதவீதமாக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7 லட்சத்து15,892-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 18,825 போ் சிகிச்சையில் உள்ளனா்.

18 போ் பலி: இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 18 போ் பலியாகியுள்ளனா். உயிரிழந்தவா்களில் 12 போ் அரசு மருத்துவமனைகளிலும், 6 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,362-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com