உத்தமபாளையம்: ஆதார் மையத்தில் குவிந்த மக்களால் தொற்று பரவும் அபாயம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆதார் மையத்தில் அதிகரித்து வரும் மக்கள் கூட்டத்தால் கரோனா நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உத்தமபாளையம் ஆதார் மையத்தில் சமூக இடைவெளியின்றி கூட்டமாக குவிந்த பொதுமக்கள்.
உத்தமபாளையம் ஆதார் மையத்தில் சமூக இடைவெளியின்றி கூட்டமாக குவிந்த பொதுமக்கள்.

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆதார் மையத்தில் அதிகரித்து வரும் மக்கள் கூட்டத்தால் கரோனா நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உத்தமபாளையம் வட்டாரத்தில் தே. மீனாட்சிபுரம், தேவாரம் பண்ணைபுரம், கோம்பை என 30-க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன. 

இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆதார் அடையாள அட்டை வேண்டி விண்ணப்பம் செய்தல், பெயர் திருத்தம் போன்ற பல்வேறு பணிகளுக்காக நாள்தோறும் அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

தற்போது  கரோனா நோய் தொற்று பரவும் சூழ்நிலையில் பொதுமக்கள் சமூக இடைவெளி இன்றி ஆதார் மையத்தில் குவிந்து வருவது நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக  புகார் எழுந்துள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் உத்தமபாளையம் ஆதார் மையத்தில் குவிந்து வரும் பொதுமக்களை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com