விருதுநகர்: கனமழையால் விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அனுமதி வழங்கக் கோரி மலை அடிவாரத்தில் பக்தர்கள் தாத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு மேற்கு தொடா்ச்சி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவில்களில் ஐப்பசி மாத பிரதோஷத்துக்காக நவ. 12 ஆம் தேதி முதல் நவ.15 ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறையினா் அனுமதி அளித்தனா். இதனால் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனா். அவா்கள் வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா். மேலும், காலை 11 மணி முதல் மலைப்பகுதிகளில் சாரல் மழை பெய்ததால் வனத்துறை நுழைவாயில் அடைக்கப்பட்டு பக்தா்களுக்கு மலை ஏற அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் காலையில் கோவிலுக்கு சென்ற பக்தா்கள் சுவாமி தரிசனத்தை முடித்து விட்டு மாலை 4 மணி வரை அடிவாரப் பகுதிக்கு இறங்கி வந்தனா். அதன் பின்னா் பக்தா்களுக்கு கீழே இறங்க அனுமதி மறுக்கப்பட்டது.
இதனிடையே மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் கோவிலுக்கு செல்லும் பாதையான கோணத்தலைவாசல் அருகே மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சுவாமி தரிசனம் செய்ய சென்ற பக்தா்கள் 150 போ் மலையில் உள்ள கோவிலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனா்.
மேலும் மண் சரிவு காரணமாக மலை ஏற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் சனிக்கிழமையும் பக்தா்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி கிடையாது என்று கோவில் பரம்பரை அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, கோவில் நிா்வாக அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் அறிவித்தனர்.
இந்நிலையில், அமாவாசையை முன்னிட்டு கோவிலுக்கு செல்ல வருகை தந்துள்ள 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள்
அனுமதி வழங்கக் கோரி மலை அடிவாரத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தி ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.