நிவர் புயல் பாதிப்பு: முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார் அமித் ஷா

நிவர் புயல் பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (கோப்புப்படம்)
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (கோப்புப்படம்)

நிவர் புயல் பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.

அதேபோன்று முதல்வர் நாராயணசாமியிடமும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். 

மேலும், நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என இரு மாநில முதல்வர்களிடமும் உறுதி அளித்துள்ளார். 

இதுகுறித்து அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில்,  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிவர் புயல் பாதிப்புகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இதுகுறித்து இரு மாநில முதல்வர்களிடம் பேசியதுடன், மத்திய அரசு மாநிலத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் என்று உறுதி அளித்துள்ளேன். ஏற்கெனவே தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வெள்ள பாதிப்பு பகுதிகளில் பணியில் உள்ளனர்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com