நண்பகல் 12 மணி முதல் பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்

நிவர் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் சேவையை தொடங்க அரசுப் பேருந்துகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

நிவர் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் சேவையை தொடங்க அரசுப் பேருந்துகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, பேருந்து சேவை நிறுத்தப்பட்ட மாவட்டங்களில் வியாழக்கிழமை நண்பகல் 12 மணி முதல் பேருந்துகளை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

முன்னதாக நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு உள்ளும் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி மதியம் 1.00 மணி முதல் பேருந்து போக்குவரத்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com