
நிவர் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் விழுந்த மரங்களை மீட்பு குழுவினர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் உடனுக்குடன் அகற்றினர் .
வங்கக் கடலில் உருவான நிவர் கடலூர் மாவட்டத்தில் வியாழக்கிமை அதிகாலையில் கரையை கடந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. கடலூரில் சுமார் 80 கி.மீ வேகத்தில் கரையை கடந்தது. இந்த புயலால் இரவு நேரத்தில் மட்டும் 27 செ.மீ மழை பதிவானது. புயல் கரையை கடந்த நிலையில் துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு காலை 5 மணிக்கு இறக்கப்பட்டது.
காலை 9 மணி வரையிலும் மழை பெய்து வரும் நிலையில், புதன்கிழமை மாலை 6.45 மணிக்கு தடைப்பட்ட மின்சாரம் வழங்கப்படவில்லை. புயலின் போது ஏராளமான இடங்களில் இரவு நேரத்தில் சாலைகளில் மரங்கள் விழுந்தன. அவற்றினை காவல்துறை, பேரிடர் மீட்பு குழுவினர், வருவாய் துறையினர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அகற்றினர்.
கடலூர் பகுதியில் மரங்களை அகற்றும் பணியை காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ் நேரடியாக ஆய்வு செய்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப் சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி ஆகியோர் இரவு நேரத்தில் முகாம்களிலும், கடற்கரையோர கிராமங்களிலும் ஆய்வு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.