ஆண்டிபட்டி அருகே கண்மாயில் மர்மமான முறையில் செத்து மிதந்த மீன் குஞ்சுகள்

ஆண்டிபட்டி அருகே கண்மாயில் மர்மமான முறையில் செத்து மிதந்த மீன்குஞ்சுகள் குறித்து வெள்ளிக்கிழமை மக்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர் .
கெங்கன்குளம் கண்மாயில் மர்மமான முறையில் செத்து மிதந்த மீன் குஞ்சுகள்.
கெங்கன்குளம் கண்மாயில் மர்மமான முறையில் செத்து மிதந்த மீன் குஞ்சுகள்.
Published on
Updated on
1 min read


ஆண்டிபட்டி அருகே கண்மாயில் மர்மமான முறையில் செத்து மிதந்த மீன்குஞ்சுகள் குறித்து வெள்ளிக்கிழமை மக்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர் .

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மயிலாடும்பாறை கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட கெங்கன்குளம் கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய்க்கு சின்னசுருளி அருவியில் இருந்து வரும் தண்ணீரின் மூலம் நிரப்பப்படுகிறது. இந்த கண்மாயில் ஒவ்வொரு ஆண்டும் நீர் இருப்பைப் பொறுத்து விவசாயிகள் மீன் குஞ்சுகள் வளர்ப்பது வழக்கம். இந்த ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழை காரணமாக  கண்மாயில்  அதிக அளவு  தண்ணீர் நிரம்பியது. 

இதனைத் தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் சார்பில் கண்மாயில் கட்லா, ரோகு, மிருகால், சிசி, ஜிலேபி உள்ளிட்ட 60 ஆயிரம் மீன்குஞ்சுகள் வளர்ப்புக்கு விடப்பட்டது. 50 நாள்களுக்கும் மேல் வளர்க்கப்பட்டு வந்த நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில்  கண்மாயில் விடப்பட்ட அனைத்து மீன்களும் மர்மமான முறையில் செத்து மிதந்தது. 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவலர்கள் கண்மாயில் மர்மநபர்கள் விஷம் கலந்தார்களா? அல்லது மீன்களுக்கு வழங்கப்பட்ட உணவில் எதுவும் கலப்படம் உள்ளதா? என்பது குறித்து  தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் இறந்த மீன்கள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மீன்கள் அனைத்தும் இறந்ததால் கண்மாயில் தேங்கியிருந்த தண்ணீரில் அதிகமான துர்நாற்றம் வீசியது. இதனையடுத்து கண்மாயில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை அப்பகுதி விவசாயிகள் ஓடையில் திறந்துவிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com