ஈரோட்டில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைத்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று ஈரோடு மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்தது.
ஈரோட்டில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்
ஈரோட்டில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்


ஈரோடு: ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைத்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று ஈரோடு மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பிசி ராமசாமி தலைமை தாங்கினார். மாநகர் மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான கே.வி. ராமலிங்கம் முன்னிலை வகித்தார். எம்எல்ஏக்கள் கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

ஒவ்வொரு வார்டு பகுதியிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பூத் கமிட்டி அமைக்க வேண்டும். அதிமுக சாதனை குறித்து பொது மக்களிடம் எடுத்து கூற வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோடு, டிசம்பர் 10 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதிக்குள் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலை, ஈரோடு கட்சி அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலை மற்றும் எம்ஜிஆர் சிலையை திறக்க அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பண்ணன் ஆகியோர் வருவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக மீண்டும் எடப்பாடி பழனிசாமியை அறிவித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வது, நிவர் புயலில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் பாலகிருஷ்ணன், கிட்டுசாமி, முன்னாள் எம்.பி. செல்வகுமார் சின்னையன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி,   ஆவின் துணைத் தலைவர் குணசேகரன், ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர்கள் வீரக்குமார், பாவை அருணாச்சலம், மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் நந்தகோபால், பகுதிச் செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஸ், ஜெயராஜ், முருகசேகர், கோவிந்தராஜ், ராமசாமி, தங்கமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com