காந்தி ஜெயந்தி: சென்னையில் டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை
காந்தி ஜெயந்தியினை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளுக்கும் விடுமுறை.


காந்தி ஜெயந்தியினை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சேர்ந்த பார்கள் உள்ளிட்டவற்றை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், வருகின்ற வெள்ளிக்கிழமை காந்தி ஜெயந்தியினை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், உரிமம்கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சேர்ந்த பார்கள் மற்றும் பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும் எனவும், அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
தவறினால். மதுபான விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் தெரிவிக்கப்படுகிறது, இத்தகவலை சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர். சீத்தாலட்சுமி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...