அக்.6-ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை வர உத்தரவு
அக்டோபர் 6-ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை வர கட்சித் தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.


சென்னை: அக்டோபர் 6-ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை வர கட்சித் தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அக்டோபர் 7-ம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிமுக எம்எல்ஏக்களின் கருத்துகளை கேட்டறிய, அனைவரையும் அக்டோபர் 6-ம் தேதி சென்னை வர கட்சித் தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் கட்சிக்குள் எழுந்துள்ளது. நடந்து முடிந்த அதிமுக செயற்குழுக் கூட்டத்திலும் இது தொடர்பாக கடுமையான விவாதங்கள் நடைபெற்றதாகக் கூறப்பட்டது.
அன்றைய தினமே, அக்டோபர் 7-ம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...