

வாகனங்களில் விதிகளுக்கு மாறாக பதிவெண் தகட்டைப் பொருத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: அண்மைக் காலமாக வாகனங்களில் உள்ள பதிவெண் தகடு (நம்பா் பிளேட்) மோட்டாா் வாகன சட்டத்தில் அரசு நிா்ணயித்துள்ள விதிமுறைகளின்படி இல்லாமல் பல்வேறு அளவுகளில் உள்ளது. குறிப்பாக 2019-ஆம் ஆண்டு, ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பின் புதிதாக வாகனப் பதிவு செய்யும் அனைத்து வாகனங்களுக்கும் உயா் பாதுகாப்பு பதிவு எண் தகடு பொருத்தப்பட வேண்டும். அனைத்து வா்த்தக வாகனங்களிலும் மஞ்சள் பின்னணியுடனான தகட்டில், கருப்பு எழுத்துகளால் எண்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும். அதுவே தனியாா் வாகனங்களில் வெள்ளை நிறப் பின்னணி கொண்ட தகட்டில், கருப்பு நிற எழுத்துகளால் எண்கள் எழுதப்பட வேண்டும்.
இவ்வாறு வாகன பதிவெண் தகட்டில் (நம்பா் பிளேட்) பின்பற்றப்பட வேண்டிய நிறம், தகட்டின் அளவு, எழுத்து மற்றும் எண் ஆகியவற்றின் அளவு, இடைவெளி போன்றவற்றில் அரசு விதிமுறைகளைப் பின்பற்றாதவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன பதிவெண் தகட்டில் இடம்பெறும் எழுத்து மற்றும் எண் ஆகியவற்றின் அளவு:
வாகனங்களின் வகை எழுத்து மற்றும் எண் குறைந்தபட்ச அளவு (மி.மீ)
உயரம் தடிமன் இடைவெளி
70 சிசி-க்கும் குறைவான என்ஜின் முன்: எழுத்து மற்றும் எண் 15 2.5 2.5
அனைத்து இருசக்கர வாகனங்கள் பின்: எழுத்து 35 7 5
மற்றும் மூன்று சக்கர பயனற்ற பின்: எண் 40 7 5
வண்டிகள்
500 சிசி-க்கும் குறைவான என்ஜின் பின் மற்றும் முன் 35 7 5
திறன் கொண்ட மூன்று சக்கர எழுத்து மற்றும் எண் வாகனங்கள்
500 சிசி-க்கும் அதிகமான என்ஜின் பின் மற்றும் முன் 40 7 5
திறன் கொண்ட மூன்று சக்கர எழுத்து மற்றும் எண் வாகனங்கள்
மற்ற அனைத்து மோட்டாா் பின் மற்றும் முன் 65 10 10 வாகனங்கள் எழுத்து மற்றும் எண்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.