மேலும், கோயம்புத்தூர் - அரசு பொறியியல் கல்லூரியில் 6 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவர்களுக்கான விடுதிக் கட்டடம்; சேலம் மாவட்டம், எடப்பாடி- பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 கோடியே 97 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 கூடுதல் வகுப்பறைகள், 3 ஆய்வகக் கட்டடங்கள் மற்றும் கழிவறைகள்; சேலம், அரசு பொறியியல் கல்லூரியில் 5 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உலோகவியல் துறையில் முதுநிலைப் பாடப் பிரிவுக்கான வெல்டிங் தொகுதிக் கட்டடம், கூடுதல் வகுப்பறைகள், பணியாளர் அறைகள், தேர்வு அறை, கருத்தரங்கு கூடம் மற்றும் கழிவறைகள்; சேலம், அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் 3 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 13 கூடுதல் வகுப்பறைகள், 3 ஆய்வகக் கட்டடங்கள், கருத்தரங்கு கூடம் மற்றும் கழிவறைகள்; திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவாக்குடி - அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 3 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 கூடுதல் வகுப்பறைகள், கருத்தரங்கு கூடம், கூட்டரங்கம் மற்றும் கழிவறைகள்; நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை - தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 கூடுதல் வகுப்பறைகள்; திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில்- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் 3 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 16 கூடுதல் வகுப்பறைகள், பணியாளர் அறை, கழிவறைகள் மற்றும் இதரக் கட்டடங்கள்; திருநெல்வேலி - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 5 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவர்களுக்கான விடுதிக் கட்டடம்; திசையன்விளை - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் 3 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 16 கூடுதல் வகுப்பறைகள் பணியாளர் அறை, கழிவறைகள் மற்றும் இதரக் கட்டடங்கள்; பனகுடி - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் 3 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 16 கூடுதல் வகுப்பறைகள் பணியாளர் அறை, கழிவறைகள் மற்றும் இதரக் கட்டடங்கள்;