ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி திடீர் ஆலோசனை

தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையில் முக்கிய அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

News image
அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி திடீர் ஆலோசனை
Updated On :5 அக்டோபர் 2020, 7:34 am

DIN


சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையில் இன்று முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அமைச்சர்கள் தங்கமணி, எஸ்பி வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம், ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

அக்டோபர் 7-ம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்பட உள்ள நிலையில், அமைச்சர்களுடன் இன்று முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், கடந்த இரண்டு நாள்களாக தேனியில், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு, இன்று பிற்பகலில் சென்னை வரவிருக்கும் நிலையில், தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.