கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் 50 ரூபாய்

சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சில்லறை விற்பனையில் இன்னும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் 50 ரூபாய்
கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் 50 ரூபாய்


சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சில்லறை விற்பனையில் இன்னும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

புதிதாக விளைவிக்கப்படும் வெங்காயம் நவம்பர் இறுதியில் சென்னையில் உள்ள சந்தைகளை வந்தடைந்தால்தான் தற்போதைய விலை குறையும் என்று வியாபாரிகள் கருதுகிறார்கள்.

அனைத்துச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எஸ். சந்திரன் இது பற்றி கூறுகையில், மகாராஷ்டிரத்தில் வெங்காயத்தை ஏராளமான விவசாயிகள் ஏற்றுமதி செய்வதால், அங்கிருந்து வெங்காய வரத்து குறைந்துவிட்டது. இதனால், கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் விலையானது கடந்த 10 நாள்களுக்கு முன்பே ரூ.40 ஐ எட்டிவிட்டது. 

வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, வெங்காயத்தின் விலை ஓரளவுக்கு சீரடைந்தது. ஆனால், வழக்கமாகவே இந்த காலக்கட்டத்தில் வெங்காயத்தின் விலை உயர்ந்தே இருக்கும், புதிதாக விளையும் வெங்காயங்கள் சந்தையை அடையும் வரை மொத்த விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.40 முதல் ரூ.50 என்ற நிலையிலேயே நீடிக்கும் என்றார்.

வெங்காய வியாபாரியான பாஸ்கர் இது குறித்துக் கூறுகையில், தற்போது ஒரு கடைக்கு ஒரு லோடு மட்டுமே சென்னை மாநகர மேம்பாட்டு அதிகாரிகளால் அனுமதி அளிக்கப்படுகிறது. இதுவும், வெங்காய பற்றாக்குறையை ஏற்படுத்தி விலையேற்றத்துக்குக் காரணமாகிவிட்டதாகக் கூறுகிறார்.

சென்னையில் வெண்டைக்காய், காரட், பீன்ஸ் மற்றும் இதர காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் காய்கறிகளின் விலையைக் கட்டுப்படுத்த எந்த நடைமுறையும் இல்லை. சில்லறை விற்பனை கடைகளில் அவர்களாகவே கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள் என்று சென்னைவாசியான பாரதி குற்றம்சாட்டுகிறார்.

கடந்த ஆண்டு மகாராஷ்டிரத்தில் இருந்து வெங்காயத்தின் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால் ஒரு கிலோ வெங்காயம் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com