திண்டுக்கல் சிறுமி கொலை வழக்கில் அரசு மேல் முறையீடு செய்யும்: அமைச்சர் சி.வி.சண்முகம்

திண்டுக்கல் சிறுமி வழக்கில் தீர்ப்பை ஆராய்ந்து தமிழக அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். 
அமைச்சர் சி.வி.சண்முகம்
அமைச்சர் சி.வி.சண்முகம்

செஞ்சி: திண்டுக்கல் சிறுமி கொலை வழக்கில் குற்றவாளியை விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யும் என சட்டம் மற்றும் நீதிமன்றங்கள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் வல்லம் ஒன்றியம் சேர்விளாகம், கீழ்மாம்பட்டு ஆகிய கிராமங்களில் நடைபெற்ற இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோசனை வழங்கும் முகாமிற்கு வருகை தந்த அமைச்சர் சி.வி.சண்முகம் உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர்.

பின்னர் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் சந்தித்தபோது கூறியது:

திண்டுக்கல் சிறுமி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றம் விடுதலை செய்தததை தொடர்ந்து, தமிழக அரசு இந்த வழக்கை ஆராயந்து மேல் முறையீடு செய்யும்.

குற்றவாளியை விடுதலை செய்தது மிகப்பெரிய கொடுமையான குற்றம் ஆகும். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளது வேதனைக்குரியது. எனவே, தமிழக அரசு ஆராயந்து மேல்முறையீடு செய்வதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் எனத் தெரிவித்தார்.

திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளியை விடுவிடுத்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் அவ்வழக்கை மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் முடி திருத்தும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com