வாசுதேவநல்லூரில் அதிமுக ஆண்டு விழா
கடையநல்லூர்: அதிமுக 49 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி வாசுதேவநல்லூரில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பயணியர் விடுதி முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் மனோகரன் தலைமை வகித்து கட்சி கொடியேற்றினார். தொடர்ந்து எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.
வாசுதேவநல்லூர் பேரூர் செயலர் சீமான் மணிகண்டன், ஒன்றிய செயலர் மூர்த்தி பாண்டியன், அதிமுக நிர்வாகிகள் சண்முகையா, வெங்கடேசன், துரைப்பாண்டியன், நீராவி, திவான்மைதீன், முருகையா, ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.