
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி வெளியிட்டார்.
இந்திய தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2021- க்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணி மேற்கொள்வதற்கு முன்பாக வாக்குச் சாவடி வரையறை பணி மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி வெளியிட்டார்.
அப்போது வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொர்பாக ஆட்சேபனைகள இருந்தால் வரும் 30 ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை சார் ஆட்சியர் க்இளம்பகவத், அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.