
உயர்கல்வித் துறையின் அனைத்து பல்கலைக் கழகங்களின் கட்டுப்பாட்டில் பயிலும் மாணவர்களுக்கான இறுதி பருவத்தேர்வு செப்டம்பர் 15-க்குப் பிறகு நடத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அறிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு
"உயர்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டுவரும் அனைத்து பல்கலைக் கழகங்களின் கட்டுப்பாட்டில் பயிலும் மாணாக்கர்கள் மற்றும் பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் ஆகியோர்களுக்கான இறுதி பருவத்தேர்வு செப்டம்பர் 15-க்குப் பிறகு நடத்தப்பட உள்ளது.
இதற்கான விரிவான தேர்வு அட்டவணை மற்றும் தேர்வு மையங்கள் விரைவில் வெளியிடப்படும். மேற்படி இறுதி ஆண்டு தேர்வுகள் மாணாக்கர்கள் நேரில் வந்து எழுதக்கூடிய தேர்வாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மாணாக்கர்கள் தேர்விற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், B.Arch எனப்படும் கட்டிட அமைப்பியல் இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு செப்டம்பர் 7-ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. B.Arch இளநிலை பட்டப்படிப்பிற்கு சேர விரும்பும் மாணாக்கர்கள் செப்டம்பர் 7-ம் தேதி முதல் www.tneaonline.org என்ற இணைய தளத்தில் தங்கள் பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.