கரோனா பேரிடரிலும் அவசரகால சிகிச்சை மையங்களில் சிறப்பான சிகிச்சை: விஜயபாஸ்கர்

கரோனா காலத்திலும் விபத்து, அவசரகால சிகிச்சை மையங்களில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரோனா பேரிடரிலும் அவசரகால சிகிச்சை மையங்களில் சிறப்பான சிகிச்சை
கரோனா பேரிடரிலும் அவசரகால சிகிச்சை மையங்களில் சிறப்பான சிகிச்சை
Updated on
1 min read

சென்னை: கரோனா காலத்திலும் விபத்து, அவசரகால சிகிச்சை மையங்களில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, தமிழக அரசு, கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதே வேளையில், விபத்து மற்றும் அவசர கால சகிச்சைகள் தங்கு தடையின்றி சிறப்பான முறையில் அளித்திட தமிழக முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன்னெடுப்பு திட்டத்தின் கீழ் செயல்பட்டுவரும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்களில் மார்ச் 2020 முதல் இதுவரை 1,52,118 நபர்களுக்கு விபத்து உள்ளிட்ட நிகழ்வுகளால் ஏற்பட்ட காயங்களுக்கு அவசரகால சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. 
இவர்களில் 63,633 நபர்களுக்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. இம்மையங்களில், விஷம் அருந்துதல் உள்ளிட்ட சுய தீங்கு ஏற்படுத்திக் கொண்ட 52,849 நபர்களுக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாம்பு கடித்த 19,947 நபர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 4,494 குழந்தைகளுக்கு அவசரகால உயிர்காக்கும் சிகிச்சைகளும், 4,432 நபர்களுக்கு மாரடைப்பிற்கான சிகிச்சைகள், 7,775 நபர்களுக்கு பக்கவாத நோய்க்கான சிகிச்சைகள் என மொத்தம் 2,41,615 நபர்களுக்கு அவசரகால சேவைகள் அளிக்கப்பட்டு விலை மதிப்பில்லாத உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.

தமிழக அரசின் மக்கள் நலன் காக்கும் பணிகள் மூலம் கரோனா வைரஸ் தொற்று காலத்திலும் தமிழக அரசின் தொய்வில்லா செயல்பாடு அனைவரின் கவனத்தையும் தொடர் பாராட்டினையும் பெற்றுவருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com