
வேதாரண்யம்: நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த 4 மீனவர்களை தாக்கிய இலங்கை மீனவர்கள் என சந்தேகிக்கப்படும் மர்ம நபர்கள் மீனவர்களின் வலைகளை பறித்துச் சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மீனவர்கள் சனிக்கிழமை காலையில் கரைக்கு திரும்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆறுகாட்டுத்துறை ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான கண்ணாடியிழைப் படகில், கோபி, வேலவன், சுகுமாரன், காளிதாஸ் ஆகிய 4 மீனவர்கள் வெள்ளிக்கிழமை கடலுக்குள் சென்றனர்.
கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ஒரு படகில் வந்த இலங்கை மீனவர்கள் என சந்தேகிக்கப்படும் மர்ம நபர்கள் மீனவர்களை தாக்கியுள்ளனர். அத்துடன், 600 கிலோ மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்கள் கொள்ளையடித்து சென்றனர்.
பாதிக்கப்பட்ட மீனவர்கள் சனிக்கிழமை கரை திரும்பிய நிலையில், இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு தலையில் காயமடைந்த மீனவர் கோபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.