கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

லாரியில் மொபட் மோதி கோவில் பூசாரி உள்பட இருவர் பலி

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திரகவுண்டன்பாளையத்தில், சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரியில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், வாழப்பாடியைச் சேர்ந்த கோவில் பூசாரியும், இவரது நண்பரும் பரிதாபமாக

News image
லாரியில் மொபட் மோதி கோவில் பூசாரி உட்பட இருவர் பலி
Updated On :27 ஜனவரி 2024, 5:19 pm

DIN


வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திரகவுண்டன்பாளையத்தில், சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரியில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், வாழப்பாடியைச் சேர்ந்த கோவில் பூசாரியும், இவரது நண்பரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து ஏத்தாப்பூர் காவல்நிலைய காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி கிழக்குபள்ளக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முனியன் (65 ) கோவில் பூசாரி இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பரான ராமு ( 75 )ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை கெங்கவல்லி அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்குச் சென்று பூஜை செய்து வழிபாடு செய்துள்ளனர். அங்கிருந்து இரவு நேரத்தில் இருவரும் சொந்த ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பி உள்ளனர். புத்திரகவுண்டன்பாளையம் தனியார் பள்ளி அருகே, சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது,  இருளில் தெரியாததால், சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் எதிர்பாராதவிதமாக இவர்களது இருசக்கர வாகனம் மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர்கள் முனியன், ராமு ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து சனிக்கிழமை காலை, ஏத்தாப்பூர் காவல்நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குலதெய்வ கோவிலுக்கு பூஜையும் வழிபாடும் செய்யச் சென்ற நண்பர்களான இரு முதியவர்கள், சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், இப்பகுதி பொதுமக்கள் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.