நாமக்கல்: அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

அண்ணாவின் உருவச் சிலைக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள்  மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். 
நாமக்கல்: அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
நாமக்கல்: அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
Updated on
1 min read

நாமக்கல்: மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 112-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள அண்ணாவின் உருவச் சிலைக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள்  மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். 

தொண்டர்கள் பதாகைகள் ஏந்தியபடி ,பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர் . நகர பொறுப்பாளர் ராணா ஆர்.ஆனந்த் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோவன், மாவட்ட துணை செயலாளர் பொன்னுசாமி, மாநில மகளிர் அணி இணை செயலாளர் ராணி,  தலைமை செயற்குழு உறுப்பினர் இளஞ்செழியன், பொதுக்குழு உறுப்பினர்  மாயவன், முன்னாள் நகர பொறுப்பாளர் மணிமாறன், முன்னாள் நகர செயலாளர் எல்.ஜி.பி.செல்வராஜ் மற்றும் வார்டு செயலாளர்கள், வார்டு பிரதிநிதிகள், சார்பு அணி அமைப்பாளர்கள், நிர்வாகிகள், முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com