
முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவும், அமமுக அமைப்புச் செயலாளருமான எஸ். சிவராஜ், ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில், அண்மையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த இவர், அருகே உள்ள ரிஷிவந்தியம் சட்டப்பேரவைத் தொகுதியில், 1984 முதல் நான்கு முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தார். இறுதியாக விஜயகாந்த் அத்தொகுதியில் போட்டியிட்டபோது, அவரிடம் தோல்வி அடைந்தார்.
இதனையடுத்து, தற்போது அமமுக அமைப்புச் செயலாளராக இருந்து வந்தார்.
இவரது உடல் நாளை திருக்கோவிலூரில் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.