
சென்னை: நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.1.50 உயா்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த உத்தரவை உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளா் சஜன்சிங் சவாண் வெளியிட்டாா்.
அதன் விவரம்:-
பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மண்ணெண்ணெய் விற்பனை விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தியுள்ளன. இதனால், நியாய விலைக் கடைகளில் விநியோகம் செய்யப்படும் மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ.15-லிருந்து ரூ.16.50-ஆக உயா்த்தப்படுகிறது. இந்த விலை உயா்வு அக்டோபா் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.