எஸ்.பி.பி. மறைவு: பிற மாநில தலைவர்கள் இரங்கல்

பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எஸ்.பி.பி.
எஸ்.பி.பி.
Published on
Updated on
1 min read

பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், சைக்கலைஞர் எஸ். பி. பாலசுப்ரமணியம் காலமானதை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவரது மறைவு நமது கலாச்சார வாழ்க்கைக்கு பெரும் இழப்பு. துயரமடைந்த குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.


இதேபோன்று எஸ்.பி.பி.யின் மறைவுக்கு கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா இரங்கல் தெரிவித்துள்ளார். எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மரணம் துக்கத்தை அளித்தாலும் தனது பாடல்கள் மூலம் அவர் வாழ்வார் என்று சித்தராமையா பதிவிட்டுள்ளார்.


மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ள சுட்டுரை பதிவில், இசை சாதனையாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது பொன்னான குரல், பல தலைமுறையினரை தாண்டி ஒலித்து கொண்டிருக்கும். அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், இசையுலக நண்பர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


பிரபல பின்னணி பாடகர், சகோதரர், எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைந்த செய்தி அதிர்ச்சி அளிக்கின்றது. தெலுங்கு மண்ணில் பிறந்து தமிழ் மண்ணில் பிரபலமடைந்த எஸ்.பி.பி. மண்ணுலகில் பாடியது போதும் இனிமேல் விண்ணுலகில் பாட வாருங்கள் என்று விண்ணுலகம் அழைத்துக்கொண்டதோ? 
என்றுதான் நினைக்க தோன்றுகிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,திரை உலகினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் அவரது குரல் விண்ணுலகில் ஒலிக்கும் என்றே ஆறுதல் அடைவோம் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com