காரைக்குடி: பட்டா வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காரைக்குடியில் நகராட்சி மற்றும் சங்கராபுரம் பகுதிகளில் பட்டா வழங்கக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி அலுவலகம் எதிரே நகராட்சி மற்றும் சங்கராபுரம் ஊராட்சி பகுதிகளில் வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியினர் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காரைக்குடி வட்டம் சங்கராபுரம் ஊராட்சி கழனிவாசல் சர்வே எண் 65-ல் உள்ள அனைத்து நகர்களுக்கும் சாலை அமைத்தும், மனை இடங்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தியும், காரைக்குடி நகராட்சிக்குள்பட்ட அண்ணா நகர், ஜீவா நகர், மீனாட்சிபுரம், வண்ணார் ஓடை மற்றும் கணேசபுரம், கருணாநிதி நகர், சந்தைப்பேட்டை, காள வாய்ப் பொட்டல், இந்திரா நகர், மருதுபாண்டியர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருக்கும் பொது மக்களுக்கு தாமதிக்காமல் பட்ட வழங்கிடக் கோரியும் நாம் தமிழர் கட்சி காரைக்குடி சட்டபேரவைத் தொகுதியின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் சாயல் ராமு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் பிரபாகர் மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

