திமுகவில் இருந்து கே.பி.ராமலிங்கம் நீக்கம்

திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கே.பி.ராமலிங்கம் நீக்கம் செய்யப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஸ்டாலின்
ஸ்டாலின்

திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் கே.பி.ராமலிங்கம் நீக்கம் செய்யப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கே.பி.ராமலிங்கம் திமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக  இருந்துள்ளார். மேலும், சமீபத்தில்  திமுக விவசாய அணி மாநிலச்  செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 

முன்னதாக கே.பி.ராமலிங்கம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், 'கரோனாவுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதேநேரத்தில் கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் கூறுவது அவசியமற்றது. 144 தடை உத்தரவு என்பது அரசுக்கு மட்டுமின்றி அரசியல் கட்சி நடவடிக்கைகளுக்கும்தான். எனவே, அனைத்துக் கட்சிக் கூட்டம் வேண்டாம்' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com