சிதரம்பத்தில் ஒரு பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி: தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்

தில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற சிதம்பரத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

சிதம்பரம் பள்ளிப்படை பூதகேனி பகுதியை  சேர்ந்த ரியாஸ்கான். இவர் சிதம்பரம் மேலவீதியில் உள்ள ஒரு தனியார் மெடிக்கல்லில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரும், இவரது மனைவியும் தில்லி தப்லீக் ஜமாத்  மாநாட்டில் கலந்து கொண்டு, பின்னர் அந்தமான் சென்று சிதம்பரத்திற்கு வந்துள்ளனர். 

இந்நிலையில் மேற்கண்ட இருவரையும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில் ரியாஸ்தான் மனைவி 38 வயது என்பவருக்கு கரோனா வைரஸ் நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் எஸ்.கார்த்திகேயன் , வட்டாட்சியர் ஹரிதாஸ், காவல் ஆய்வாளர்கள் முருகேசன், தேவேந்திரன் ஆகியோர் நேரில் சென்று, பள்ளிபடை பூதகேனி பகுதியில் தடுப்பு கட்டைகள் அமைத்து பொதுமக்கள் யாறும் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com