30 நிமிடங்களில் பரிசோதிக்கும் ஒரு லட்சம் கருவிகள் விரைவில் வாங்கப்படுகிறது: முதல்வர்

30 நிமிடங்களில் பரிசோதனை செய்யும் வகையில் ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட உள்ளன என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
30 நிமிடங்களில் பரிசோதிக்கும் ஒரு லட்சம் கருவிகள் விரைவில் வாங்கப்படுகிறது: முதல்வர்

30 நிமிடங்களில் பரிசோதனை செய்யும் வகையில் ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுடன் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் கரோனாவின் வீரியம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விமான நிலையத்தில் 2,10,538 பயணிகள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். தமிழகத்தில் மேலும் 21 இடங்களில்  பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது. 

3,371 வென்டிலேட்டர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ளன. 30 நிமிடங்களில் பரிசோதனை செய்யும் வகையில் ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட உள்ளன. இக்கருவிகள் வந்தவுடன் கரோனா அறிகுறி உள்ளதா என விரைந்து பரிசோதனை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் மொத்தம் 38 மையங்கள் மூலம் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் நடமாடும் காய்கறிக் கடைகள் திட்டத்தை அமல்படுத்த ஏற்பாடு செய்யப்படும். அத்தியாவசியப் பொருட்களை முடிந்த அளவு வீடுகளுக்கே சென்று வழங்க மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கும். 

காவல்துறையினரின் கஷ்டத்தை மக்கள் புரிந்துகொண்டு ஒத்துழைக்க வேண்டும். மக்களை துன்புறுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல. மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். சட்டத்தை அரசு பிறப்பித்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவது மக்களின் கையில்தான் உள்ளது. வெளிநாடு சென்றிருந்தாலும், மாநாடு சென்றிருந்தாலும் தாங்களகவே தகவல் தெரிவிப்பது நல்லது. பல்வேறு தொழிலாளர் நல வாரியங்களில் உள்ளவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

தமிழகத்தில் சுமார் 10ஆயிரம் பேரின் கண்காணிப்பு காலம் முடிவடைந்துள்ளது. சென்னையில் 37 பகுதிகள் சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பட்டு வருகின்றன. 10 வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி பின்ன அறிவிக்கப்படும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com