ஆட்சியர் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கம் திறப்பு 

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நோய்த்தொற்றைத் தடுக்கும் வகையில் கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. 
ஆட்சியர் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கம் திறப்பு 

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நோய்த்தொற்றைத் தடுக்கும் வகையில் கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. 

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகப் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனியார் அமைப்புகளுடன் சேர்ந்து கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப்பாதையும் அமைக்கப்பட்டு வருகிறது. 

இதன்படி திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட், பாரத ஸ்டேட் வங்கி, தாராபுரம் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,திருப்பூர் ஸ்ரீபுரம் அறக்கட்டளை, மாவட்ட நிர்வாகம் ஆகியன இணைந்து ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் கிருமி நாசினி சுரங்கம் அமைக்கப்பட்டது.

இந்த சுரங்கப்பாதையை ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ புரம் அறக்கட்டளை தலைவர் ஜெயசித்ரா ஏ.சண்முகம், செயலாளர் ஏ.எல்.காண்டீபன், பொருளாளர் மெஜஸ்டிக் கந்தசாமி,திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொதுச் செயலாளர் டி.ஆர்.விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com