நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.80 கோடி: முதல்வர் நன்றி

கரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ. 80 கோடி பெறப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார். 
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.80 கோடி பெறப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார். 

கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கரோனா தடுப்புப் பணிக்கு தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள்,  பொதுமக்கள் நிவாரண நிதி வழங்க முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். அதனடிப்படையில், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள் பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் கரோனா தடுப்புப் பணிக்கு இதுவரை பெறப்பட்ட மொத்தத் தொகை ரூ.79 கோடியே 74 லட்சத்து 61 ஆயிரத்து 424 ரூபாய் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், நிவாரணம் அளித்த நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com