திண்டுக்கலில் மேலும் 9 பேருக்கு கரோனா: மாவட்ட வாரியாக நிலவரம்

திண்டுக்கலில் மேலும் 9 பேருக்கு கரோனா: மாவட்ட வாரியாக நிலவரம்

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,204 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 31 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

இதில், அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 9 பேருக்கும், சென்னை -5, தஞ்சாவூர் -4, தென்காசி-3, மதுரை -2, ராமநாதபுரம் -2, நாகப்பட்டினம் -2, கடலூர், சேலம், சிவகங்கை, கன்னியாகுமரியில் தலா ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,204 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 210 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கோவையில் பாதிப்பு எண்ணிக்கை 126 ஆக உள்ளது.

திண்டுக்கலில் இன்று மட்டும் புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட, அம்மாவட்டத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தின் இன்றைய நிலவரம்:

வ.எண்

மாவட்டம்

13.04.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்14.04.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் மொத்தம்
1.சென்னை2055210
2.கோவை126 126
3.திருப்பூர்79 79
4.ஈரோடு64 64
5.திண்டுக்கல்56965
6.திருநெல்வேலி56 56
7.நாமக்கல்45 45
8.செங்கல்பட்டு46 46
9.திருச்சி43 43
10.தேனி40 40
11.கரூர்41 41
12.ராணிப்பேட்டை38 38
13.மதுரை39241
14.திருவள்ளூர்33 33
15.நாகப்பட்டினம்29231
16.தூத்துக்குடி26 26
17.விழுப்புரம்23 23
18.கடலூர்19120
19.சேலம்18119
20.திருப்பத்தூர்17 17
21.விருதுநகர்17 17
22.திருவாரூர்16 16
23.வேலூர்16 16
24.கன்னியாகுமரி15116
25.திருவண்ணாமலை12 12
26.தஞ்சாவூர்12416
27.சிவகங்கை10111
28.நீலகிரி9 9
29.காஞ்சிபுரம்8 8
30.தென்காசி538
31.ராமநாதபுரம்527
32.கள்ளக்குறிச்சி3 3
33.அரியலூர்1 1
34.பெரம்பலூர்1 1
 மொத்தம்1,173311,204

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com