தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தேர்வுகள், வகுப்புகள் அனைத்தும் ரத்து: அண்ணா பல்கலை அறிவிப்பு

பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறை மற்றும், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இணைப்புக் கல்லூரிகளில் நடைபெற இருந்த அனைத்து வகுப்புகளும், செமஸ்டர் தேர்வுகளும், திட்ட மதிப்புகளும், வகுப்புத் தேர்வுகளும்

News image
Updated On :17 ஏப்ரல் 2020, 9:18 am

சென்னை: பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறை மற்றும், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இணைப்புக் கல்லூரிகளில் நடைபெற இருந்த அனைத்து வகுப்புகளும், செமஸ்டர் தேர்வுகளும், திட்ட மதிப்புகளும், வகுப்புத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் இணைப்புக் கல்லூரிகள் மீண்டும் தொடங்கும் தேதி, செமஸ்டர் தேர்வுகளுக்கான தேதிகள், திட்ட மதிப்புகள், வகுப்புத் தேர்வுகள் அனைத்தும் எப்போது நடைபெறும் என்பதற்கான தேதி பிறகு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்படுவதாகவும், தேர்வு குறித்த அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை அடுத்து வகுப்புகள், தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பள்ளி, கல்லூரிகள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளிகளில் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. மாநில பாடத் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு வரை தோ்ச்சி அறிவிக்கப்பட்டது. அதுபோல சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை தோ்வின்றி தோ்ச்சி அறிவிக்கப்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.