முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், தேவையான தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. மேலும், மாவட்ட நிர்வாகம் தரப்பிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இன்று காலை 8 மணியளவில் அவர் சென்னையில் இருந்து புறப்பட்ட அவர் பிற்பகல் சேலத்தை அடைந்தார். தொடர்ந்து, சேலத்தில் மேற்கொள்ளப்பட்டு யாரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் மற்றும் கரோனா தடுப்புப் பணிகளுக்காக சேலம் மண்டலத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் வினோத் குமார் மற்றும் மஞ்சுநாதா ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

மேலும், மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கனிகர், டி.ஐ.ஜி. பிரதீப் குமார் மற்றும் வருவாய் துறையினர் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என்ன, கரூர் சென்று செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லையா? ஏன்??

வார பலன்கள் (ஏப். 24 - 30) மேஷம் - மீனம்! பதவி உயர்வு யாருக்கு?

தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நெஞ்சுவலியால் மரணம்!

தன்னுடைய ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து பிறந்தநாளைக் கொண்டாடிய சச்சின்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


