சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் இனி காணொலி காட்சி மூலமாக மட்டுமே நடைபெறும் என்று நீதிமன்றத் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மே 3 ஆம் தேதி வரை நீதிமன்றப் பணிகள் எதுவும் நடைபெறாது என்றும் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் நீதிமன்றங்களுக்கான மே மாத விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை அதிகாரி ஒருவருக்கும் ஊழியர் ஒருவரும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, நீதிமன்றம் முழுவதும் சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நீதிமன்ற வளாகம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு தற்போது சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, ஊரடங்கு முடியும் வரை அவசர வழக்குகள் காணொலி மூலமாக மட்டுமே விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என்ன, கரூர் சென்று செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லையா? ஏன்??

வார பலன்கள் (ஏப். 24 - 30) மேஷம் - மீனம்! பதவி உயர்வு யாருக்கு?

தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நெஞ்சுவலியால் மரணம்!

தன்னுடைய ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து பிறந்தநாளைக் கொண்டாடிய சச்சின்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


