தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

10 ஆம் வகுப்பு தேர்வுகள் கட்டாயம் நடைபெறும்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

News image

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

Updated On :20 ஏப்ரல் 2020, 10:26 am

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், 'உயர்கல்விக்கு 10 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் அவசியம். எனவே, தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு கட்டாயம் நடத்தப்படும். ஊரடங்கு முடிவடையும் நாளான மே 3 ஆம் தேதிக்குப் பின்னர் தேர்வு அட்டவணை தயார் செய்யப்படும். அதன்பின் முதல்வருடன் ஆலோசித்து  வழிகாட்டுதலின்பேரில் தேர்வுகள் நடத்தப்படும்.

ஊரங்கிற்குப் பின்னர் சூழ்நிலையைப் பொறுத்துதான் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். ஊரடங்கு முடிந்த பின்னர், விரைவாக 12ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு முடிவுகள் வெளியாகும்.

தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணத்தை கட்டச் சொல்லி பெற்றோர்களை கட்டாயப்படுத்தக் கூடாதும், மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.