திமுகவை பூச்சாண்டித்தனங்களால் எதுவும் செய்ய முடியாது: ஸ்டாலின்

திமுக பூச்சாண்டித்தனங்களால் எவராலும்  எதுவும் செய்து விட முடியாது; தமிழ் மக்களையும் திசை திருப்பிவிட முடியாது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுகவை பூச்சாண்டித்தனங்களால் எதுவும் செய்ய முடியாது: ஸ்டாலின்
திமுகவை பூச்சாண்டித்தனங்களால் எதுவும் செய்ய முடியாது: ஸ்டாலின்

திமுக பூச்சாண்டித்தனங்களால் எவராலும்  எதுவும் செய்து விட முடியாது; தமிழ் மக்களையும் திசை திருப்பிவிட முடியாது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கடிதம் வடிவில் வெளியிட்ட அறிக்கையில், திராவிட முன்னேற்றக் கழகத்தை,   பூச்சாண்டித்தனங்களால் எவராலும்  எதுவும் செய்து விட முடியாது; எந்தமிழ் மக்களையும் திசை திருப்பிவிட முடியாது.

மருத்துவப் படிப்புக்கான அகில இந்தியத் தொகுப்பில் உள்ள இடங்களில் பிற்படுத்தப்பட்டோர் - மிகப் பிற்படுத்தப்பட்டோரை உள்ளடக்கிய இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படாததால், சமூகநீதி சிதைக்கப்பட்டு, இதர பிற்படுத்தப்பட்டோரின் கல்வி உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்றது தி.மு.க. 

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கில், ‘அகில இந்திய மருத்துவ இடங்களில் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்ற எந்தத் தடையும் இல்லை’ என்கிற அழுத்தமான தீர்ப்பினை வழங்கி, ‘மூன்று மாதங்களுக்குள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான முடிவுகளை எடுக்கவேண்டும்” என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது நமக்கான தனிப்பட்ட வெற்றியல்ல; பிற்படுத்தப்பட்ட - மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான வெற்றி. 

அதே நேரத்தில், பல்வேறு ஆபத்துகளை உணர்ந்துதான் எதிர்க்கட்சியான தி.மு.கழகம் புதிய கல்விக் கொள்கையைத் துணிந்து எதிர்க்கிறது. அது குறித்து விரிவாக விவாதித்து, மாற்றுச் செயல்திட்டங்களை வகுப்பதற்காக நாளை (2-8-2020)‘புதிய கல்விக்கொள்கை 2020’ எனும் காணொலி நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

தி.மு.க. தனது தோழமை சக்திகளுடன் இணைந்து நின்று, தமிழகத்தின் கல்வி நலன் காக்கின்ற முயற்சியை மேற்கொள்ளும்; மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத  பிற மாநில முதல்வர்கள் - அகில இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோருடன் தொடர்பு கொண்டு, இந்திய மாணவர்களின் எதிர்கால நலன் காக்கும் ஒருங்கிணைப்பு முயற்சிகளையும், அதற்கான சட்டப் போராட்டங்களையும் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com