
புதுவை முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஏழுமலை கரோனா தொற்று காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
புதுச்சேரியின் ஊசுடு தொகுதியிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டவர் ஏழுமலை(54). காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக அவர் பதவி வகித்துள்ளார்.
போக்குவரத்து மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த இவர் சில நாட்களுக்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
ஏற்கனவே புதுச்சேரியில் கரோனா தொற்றுக்கு என்ஆர் காங்கிரஸ என்ஆர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பாலன் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.