வெளிநாட்டிலிருந்து குழந்தைகளுடன் வருவோருக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு: தமிழக அரசு

வெளிநாடுகளில் இருந்து 10 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுடன் சென்னைக்கு வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து குழந்தைகளுடன் வருவோருக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு: தமிழக அரசு
வெளிநாட்டிலிருந்து குழந்தைகளுடன் வருவோருக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு: தமிழக அரசு


சென்னை: வெளிநாடுகளில் இருந்து 10 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுடன் சென்னைக்கு வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தனிமை முகாம்களில் வைக்கப்பட்டு, ஒரு வார காலத்துக்குப் பிறகே வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்திக் கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கும் விதிமுறையில், புதிதாக இரண்டு விதிமுறைகளை இணைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

அதன்படி,
வெளிநாட்டில் இருந்து 10 வயதுக்குள்பட்ட குழந்தைகளுடன் வரும் பயணிகளும்,
விமானப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு 96 மணி நேரத்துக்குள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மூலம் கரோனா இல்லை என்று சான்றிதழ் பெற்றவர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com