
கோப்புப்படம்
தமிழகத்தில் புதிதாக 5,995 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஆக. 21, வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது; மேலும் கரோனா பாதிப்பால் 101 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாநிலத்தின் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றி செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
அதில், தமிழகத்தில் இன்று புதிதாக 5,995 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகளவாக சென்னையில் 1,282 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுதும் தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 5,963. வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் தொற்று உறுதி செய்யப்பட்டோர் 32 பேர்.
இதையடுத்து, தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,67,430 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கரோனா தொற்றால் 101பேர் (அரசு மருத்துவமனை -65, தனியார் மருத்துவமனை - 36) உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் கரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 6,340 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இன்று ஒரே நாளில் 5,764 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,07,677 பேர் குணமடைந்துள்ளனர்; தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 53,413 பேர் மருத்துவமனைகளிலும், சிறப்பு மையங்களிலும், வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...