திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி ஆர்எஸ் பகுதியில் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர்.
திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி ஆர்எஸ் பகுதியில் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர்.

தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூர், ஊத்துக்குளியில் மார்க்சிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூர், ஊத்துக்குளியில் மார்க்சிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரியும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரின் பல்வேறு இடங்களில் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் கட்சியினர் ஊத்துக்குளி ஆர்.எஸ்.பகுதியில் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டுபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் தலைமை வகித்தார். இதில், மார்க்சிஸ்ட் வட்டச் செயலாளர் கே.ஏ.சிவசாமி, விவசாயிகள் சங்கத்தின் வட்டச் செயலாளர் எஸ்.கே.கெளந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com