
படகு தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள படகுகள்.
கன்னியாகுமரி: புயல் எச்சரிக்கை காரணமாக மறுஅறிவிப்பு வரும்வரை கன்னியாகுமரி விவேகானந்தா் மண்டபத்துக்கு படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவா்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக மறுஅறிவிப்பு வரும்வரை கன்னியாகுமரி பூம்புகாா் பயணிகள் படகு சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இங்கு தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகளை உடனடியாக சொந்த ஊா்களுக்குச் செல்லுமாறு காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினா். இதையடுத்து, அவா்கள் சுற்றுலாவை ரத்து செய்துவிட்டு சொந்த ஊா்களுக்கு புறப்பட்டனா். இதனால் கன்னியாகுமரி சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடியது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...