உயரும் நீர்மட்டம்: புழல் ஏரியில் பிற்பகல் 3 மணிக்கு உபரி நீர் திறப்பு

சென்னை புழல் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், பாதுகாப்பு கருதி ஏரியிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு உபரி நீர் திறந்துவிடப்படுகிறது.
நீர்மட்டம் உயர்வு: பிற்பகல் 3 மணிக்கு புழல் ஏரியில் நீர் திறப்பு
நீர்மட்டம் உயர்வு: பிற்பகல் 3 மணிக்கு புழல் ஏரியில் நீர் திறப்பு


சென்னை: சென்னை புழல் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், பாதுகாப்பு கருதி ஏரியிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு உபரி நீர் திறந்துவிடப்படுகிறது.

இது குறித்து தமிழக பேரிடர் மேலாண்மை அமைப்பு வெளியிட்டிருக்கும் எச்சரிக்கைத் தகவலில்,

புழல் ஏரியின் நீர்மட்டம்  உயர்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

புழல் ஏரியின் மொத்த உயரம் 21. 20 அடியாகும். 04.12.2020 காலை 8 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 19.70 அடியாக உள்ளது. 

ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 2373 கன அடியாக உள்ளதால் இன்று பிற்பகல் 03.00 மணிக்கு முதற்கட்டமாக வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட உள்ளது.

இதனால், நாரவரி குப்பம், வடகரை கிராண்ட் லைன் புழல், வட பெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், மணலி மற்றும் சடையான்குப்பம் ஆகிய பகுதியில் கால்வாய் மற்றும்  தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com