
சென்னை: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் சனிக்கிழமை நடைபெறவுள்ளன. சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.
கரோனா நோய்த்தொற்று காரணமாக, பேரணியாகச் செல்வது போன்ற நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சனிக்கிழமை காலை 10.45 மணியளவில் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோா் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று மலா் வளையம் வைக்க உள்ளனா்.
இதன்பின்பு, மாலையில் ஜெயலலிதாவின் உருவப் படங்களுக்கு முன்பாக அகல் விளக்கு ஏற்ற வேண்டுமென அதிமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.