திருவள்ளூரில் மருத்துவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி பிரிவுகளுக்கு அறுவை சிகிச்சை அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்ததைக் கண்டித்து திருவள்ளூரில் மருத்துவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூரில் மருத்துவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூரில் மருத்துவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி பிரிவுகளுக்கு அறுவை சிகிச்சை அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்ததைக் கண்டித்து திருவள்ளூரில் மருத்துவர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்தார். இதில் இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் தலைவர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். 

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆயுர்வேதம், சித்த, யுனானி பிரிவுகளைச் சேர்ந்தோர் பயிற்சி பெற்ற பின் பல்வேறு நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யலாம் என மத்திய அரசு அனுமதித்துள்ளது. வடமாநிலங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறையை மையமாக வைத்தே அனுமதித்துள்ளதால், நவீன மருத்துவ அனுபவ அறிவு பெற்ற மருத்துவர்கள் பாதிக்கப்படும் நிலையுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் பாதிப்பு அடையும் சூழ்நிலை உள்ளது.

அதனால், சித்த மருத்துவத்தில் அனுமதி அளித்ததை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஜெகதீஷ் உள்பட தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் தமிழ்நாடு கிளையைச் சேர்ந்த மருத்துவர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com