அரியலூரில் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் 

அரியலூர் அண்ணாசிலை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்.
அரியலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி, தில்லியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக அரியலூர் அண்ணாசிலை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் மனு ஸ்ருதி கொள்கையை அமல்படுத்த முயல்வதை கைவிட வேண்டும், தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை தொடர்ந்து வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் செல்வநம்பி தலைமை வகித்தார். விவசாய பாதுகாப்பு சங்க மாவட்ட அமைப்பாளர் பாலசிங்கம் பங்கேற்று பேசினார். கட்சி தொகுதி செயலர் மருதவாணன், மாநில பொறுப்பாளர்கள் அன்பானந்தம், கருப்புசாமி, தனக்கோடி, சேட்டு, செய்தித் தொடர்பாளர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com