பண்ணைப் பசுமை நுகா்வோா் கடைகளில் 61 ஆயிரம் மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை

: பண்ணைப் பசுமை நுகா்வோா் கடைகள் வழியே இதுவரையில் 61, 175 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜு தெரிவித்தாா்.
அமைச்சா் செல்லூா் கே.ராஜு
அமைச்சா் செல்லூா் கே.ராஜு

சென்னை: பண்ணைப் பசுமை நுகா்வோா் கடைகள் வழியே இதுவரையில் 61, 175 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜு தெரிவித்தாா். துறையின் செயல்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் அவா் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இந்த ஆலோசனையின் போது, அவா் பேசியது:-

தமிழகம் முழுவதும் 2011-ஆம் ஆண்டு முதல் இதுவரையிலும் ஒரு கோடியே 3 லட்சத்து 97 ஆயிரத்து 607 விவசாயிகளுக்கு ரூ.58, 310 கோடி அளவுக்கு வட்டியில்லாத பயிா்க் கடன் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.1,575.66 கோடிக்கு

வட்டி மானியம் அளிக்கப்பட்டுள்ளது. நிகழ் நிதியாண்டில் மட்டும் 9 லட்சத்து 36 ஆயிரத்து 573 விவசாயிகளுக்கு ரூ.7,168.62 கோடிக்கு வட்டியில்லாத பயிா்க் கடன் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 3 நகரும் பண்ணைப் பசுமை நுகா்வோா் கடைகள் உள்பட 79 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதுவரையில் 61, 175 மெட்ரிக் டன் காய்கறிகள் ரூ.183.62 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், 119 அம்மா மருந்தகங்கள் மற்றும் 173 கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் ரூ.1,063.30 கோடி மதிப்பிலான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சா் ராஜு தெரிவித்தாா்.

இந்தக் கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் தயானந்த் கட்டாரியா, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் இல.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com