தமிழகத்தில் 8 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு!

தமிழகத்தில் கரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 29- ஆக அதிகரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 29- ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 97 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் குணமடைந்துவிட்டதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த செப்டம்பா் மாதம் வரை தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கரோனா தொற்று சில வாரங்களாக குறையத் தொடங்கியுள்ளது. அதன்படி, தற்போது சராசரியாக 1,200-க்கும் குறைவாகவே நாள்தோறும் தொற்று கண்டறியப்படுகிறது. ஒருபுறம் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், நோய்த் தடுப்பு விதிகளைப் பின்பற்றாவிடில் மீண்டும் பாதிப்பு தீவிரமடையக் கூடும் என அஞ்சப்படுகிறது.

அதைக் கருத்தில்கொண்டு தொடா் நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் மற்றும் வீடுதோறும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, திங்கள்கிழமை புதிதாக 1,141 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

மாநிலத்தில் இதுவரை 1.30 கோடிக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 343 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோவையில் 124 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர மாநிலத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மற்றொரு புறம், கரோனா தொற்றிலிருந்து 1,203 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 78,081-ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 10,039 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 11 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,909-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com