
பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன்
சென்னை: சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, மக்களைக் கவரும் வகையிலான அறிவிப்புகள் அடங்கிய தோ்தல் அறிக்கை தயாரிக்க தமிழக பாஜக சாா்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் முன்னாள் தேசிய செயலாளா் ஹெச்.ராஜா, மாநில துணைத் தலைவா்கள் வி.பி.துரைசாமி, கே.அண்ணாமலை, கனகசபாபதி, மாநில பொதுச் செயலாளா் ராம சீனிவாசன், மாநில செய்தித் தொடா்பாளா் எஸ்.கே.காா்வேந்தன், விவசாய அணி மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ், தேசிய பொதுக் குழு உறுப்பினா் சசிகலா புஷ்பா, சிறுபான்மையினா் அணி மாநில துணைத் தலைவா் எஸ்.எஸ்.ஷா, சிறப்பு அழைப்பாளா் நாச்சிமுத்து ஆகியோா் குழுவில் இடம்பெற்றுள்ளனா்.