
கோப்புப்படம்
திருமங்கலம் அருகே சிறுவன், சிறுமி கண்மாயில் மூழ்கி உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை விசாரிக்கின்றனர்.
அவனியாபுரம் முத்துகுமார் தெருவைச் சேர்ந்தவர் சங்கிலிமுருகன். அதே பகுதியைச் சேர்ந்த காமராஜ். இருவரும் தங்களது குடும்பத்தினருடன் கூடக்கோவிலில் பகுதியில் உள்ள சங்கிலி மாதா கோயிலுக்குச் செவ்வாய்க்கிழமை வந்துள்ளனர். அப்போது கோயிலுக்கு அருகில் உள்ள கூடக்கோவில் கண்மாயில் கைகால்களைக் கழுவிவிட்டு அனைவரும் கோயிலுக்குச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் குடும்பத்தினர் கோயிலில் சங்கிலிமுருகன் மகள் யாழினி(10), காமராஜ் மகன் குணசேகரன்(10)ஆகிய இருவரையும் காணவில்லை என இரு குடும்பத்தாரும் தேடியுள்ளனர். அப்போது குழந்தைகள் கண்மாயில் விளையாடிய நிலையில் அதில் உள்ள சேற்றில் சிக்கி, நீரில் மூழ்கி இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தைகளின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்துக் கூடக்கோவில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.